மாற்றுத் திறனாளிகளுக்கு இருமடங்கு வரிச் சலுகை???

கருத்துகள் இல்லை
மாற்றுத் திறனாளிகளுக்கு இரு மடங்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம் முன் வைத்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இரு மடங்கு வரிச் சலுகை அளிக்கும்படி நிதியமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறையின் அமைச்சர் தவார் சந்த் கெலோட் கூறினார். தனது கோரிக்கையை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

1995-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மாநில ஆணையர்கள் பங்கேற்ற 13-வது தேசிய மாநாட்டில் பேசிய அவர் இக்கருத் தைத் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2014-ஐ புதிய அரசின் நாடா ளுமன்ற நிலைக்குழு பரிசீலிக்கும் என்று கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சுற்றறிக்கை பல்வேறு துறைகளுக்கும் மாநிலங்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளதாக அவர் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் துறை எடுக்கும் என்று இத்துறைக்கான இணையமைச்சர் சுதர்சன் பகத் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக