மாற்றுத் திறனாளி பெட்டியில் பயணம்: 29 பேருக்கு அபராதம்

கருத்துகள் இல்லை
சென்னை, ஆக. 16 – ரெயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் பெட்டியில் பிற பயணிகள் ஏறி பயணம் செய்வதாக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ராவிடம் மாற்றுத் திறளாளிகள் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி புறப்பட தயாராக இருந்த ரெயிலில் மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் வேறு யாரும் பயணம் செய்கிறார்களா? என ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பொது மேலாளர் ராகேஸ் மிஸ்ரா மீண்டும் சோதனை மேற்கொண்டார்.

மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் ஏறி அவர்களின் டிக்கெட்டுகளை வாங்கி பார்த்தார். அதில், 12 பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களில் 7 பயணிகள் மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர் என தெரிய வந்தது.

அவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து மதுரை வரை பயணம் செய்ய இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து அந்த 7 பயணிகளுக்கும் அபராதம் விதித்ததோடு கீழே இறக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றதால் அந்த பயணிகளை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறக்கி அபராதமாக ரூ.1785 வசூலிக்கப்பட்டது.

மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் இதேபோல மாற்றுத்திறளாளிகள் பெட்டியில் 22 பேர் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு கீழே இறக்கி விடப்பட்டனர்.

நன்றி: www.thinaboomi.com

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக