மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

கருத்துகள் இல்லை
மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில், படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்.  இத்தேர்வில் தகுதி பெறும் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் (Backlog Vacancies) மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு  சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.

முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.

தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

சிறப்பு கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கருத்துகள் இல்லை

சென்னையிலுள்ள தேசிய மாற்றுதிறனாளிகள் கல்வியியல் கல்லூரிகளில் சிறப்பு கல்வியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. B.Ed., Special Education (Multiple Disabilities) 1 வருட படிப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

+2வில் ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி உள்ளிட்ட விரிவரங்களை அறிய www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

ஆற்றல் நிறைந்த மாற்றுத்திறனாளிகள்

கருத்துகள் இல்லை

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்

கருத்துகள் இல்லை
சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்: விருதுநகர்:விருதுநகர் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான இலவச டூவீலர்களை, 53 பேருக்கு வழங்க, 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களை அலைக்கழிப்பு செய்து, எரிச்சலடைய செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்று திறனாளி நலத்துறை அலுவலகத்தில், இலவச மூன்று சக்கர டூவிலர் வழங்க, மாற்று திறனாளிகள் 288 பேருக்கு, நேற்று நேர்முக தேர்வு நடந்தது. இதை, மாற்று திறனாளிகள் அலுவலர் மணி, ஆர்.டி.ஓ., அலுவலக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எலும்பு முறிவு டாக்டர் ஜெகநாதன் நடத்தினர். இந்த ஆண்டு, அரசு சார்பில் 11 , எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் 42 டூவீலர் என, 53 பேருக்கு டூவீலர் வழங்க, அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், நேர்முக தேர்விற்கு, ஐந்து பங்கிற்கு மேல், கூடுதலாக மாற்று

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

லால்குடியில் மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம்

கருத்துகள் இல்லை
மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம் லால்குடி: லால்குடியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இதில் 262 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் லால்குடியில் நடைபெற்றது. எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வைரமணி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், ஊராட்சி தலைவர்கள் மதிவாணன், கோல்டன் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கல்லக்குடி திமுக பிரமுகர் பால்துரை முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கருணாகரபாண்டியன், செவித்திறன் நிபுணர் செல்லம், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கதிர்வேல் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்து உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். முகாமில் செம்பரை கோபி, மாந்துறை சரவணன், நகர பிரதிநிதி இளங்கோவன், கர்ணன் லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, புவாளுர், குமுளுர், அழுந்தலைப்பூர், உட்பட 70 கிராமங்களை சேர்ந்த மாற்று திறனாளிகள் 262 பேர் கலந்துகொண்டனர். இளநிலை மறுவாழ்வு அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடநீக்கியல் வல்லுனர் ஆனந்த் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

விளையாட்டு: உலக சாம்பியன் பட்டம் வென்றவர் கண்களை கட்டி செஸ் விளையாடி மாற்று திறனாளி பெண் அசத்தல்

கருத்துகள் இல்லை
விளையாட்டு: திருச்சி: மாற்று திறனாளிகள் உலக செஸ் சாம்பியனான ஜெனித்தா ஆண்டோ, கண்களை கட்டி செஸ் விளையாடி வெற்றி பெற்றார்.
மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் திருச்சியை சேர்ந்த ஜெனித்தா ஆன்டோ. இவர், கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாடப் போவதாக அறிவித்திருந்தார். திருச்சியில் நேற்று போட்டி நடந்தது. அவருடன் விளையாட மண்ணச்சநல்லூர் அரசு பள்ளி ஆசிரியர் முகமது அலி தேர்வானார். இவர், கடந்த 4ம் தேதி நடந்த மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தவர். கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்ததோடு, முழு போட்டியையும் பார்த்தார்.

முகமது அலியின் ஒவ்வொரு காய் நகர்த்தல் குறித்தும் நடுவர் தினகரன் கூற பதிலுக்கு எந்த காயை நகர்த்த வேண்டும் என்று ஜெனித்தா கூறினார். அதன்படி நடுவர் காயை நகர்த்தினார். 44வது நகர்த்தலில் ஜெனித்தா வென்றார். அவருக்கு மாவட்ட நலப்பணிகள் நிதிக்குழு நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

ஜெனித்தா கூறுகையில், வீட்டில் குடும்பத்தினருடன் கண்ணைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடி உள்ளேன். வெளியிடத்தில் விளையாடுவது இதுதான் முதல் முறை. கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடுவதன் மூலம் கவனிப்பு திறன் அதிகரிக்கும். இதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

திருச்சி பொன்மலைப்பட்டியை சோ¢ந்த ஜெனித்தா ஆண்டோ 3 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இரு கால்களும் செயல் இழந்தன. 2007&ல் போலந்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2010&ல் ரஷ்யாவில் நடந்த போட்டியில் மாஸ்டர் பட்டம், இந்தாண்டு ஜூனில் செக் குடியரசில் நடந்த உலக செஸ் போட்டியில் பெண்களுக்கான சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

Matru Thiranali News Portal

2 கருத்துகள்
This will be the first site dedicated totally for the physically challenged people in TN. If you or any of your friends and family are matru thiranali then you must read this site for news and updates. This is the site for you.

2 கருத்துகள் :

கருத்துரையிடுக