சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்

கருத்துகள் இல்லை
சலுகைகள்: 53 டூவீலர் வழங்க 288 பேருக்கு அழைப்பு அலைக்கழிப்பால் மாற்றுதிறனாளிகள் எரிச்சல்: விருதுநகர்:விருதுநகர் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கான இலவச டூவீலர்களை, 53 பேருக்கு வழங்க, 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களை அலைக்கழிப்பு செய்து, எரிச்சலடைய செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக மாற்று திறனாளி நலத்துறை அலுவலகத்தில், இலவச மூன்று சக்கர டூவிலர் வழங்க, மாற்று திறனாளிகள் 288 பேருக்கு, நேற்று நேர்முக தேர்வு நடந்தது. இதை, மாற்று திறனாளிகள் அலுவலர் மணி, ஆர்.டி.ஓ., அலுவலக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எலும்பு முறிவு டாக்டர் ஜெகநாதன் நடத்தினர். இந்த ஆண்டு, அரசு சார்பில் 11 , எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் 42 டூவீலர் என, 53 பேருக்கு டூவீலர் வழங்க, அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், நேர்முக தேர்விற்கு, ஐந்து பங்கிற்கு மேல், கூடுதலாக மாற்று
திறனாளிகள் அழைக்கப்பட்டனர். இவர்களில் பலர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி பகுதியிலிருந்து, ஆட்டோவிற்கு 500 ரூபாய்க்கு மேல் செலவழித்து வந்தனர். 
53 பேருக்கு டூவீலர் வழங்க, நேர் முக தேர்வு நடத்திய,சம்பந்தப்பட்ட துறையினர், 288 பேருக்கு அழைப்பு விடுத்து, அலைக்கழிப்பு செய்துள்ளனர். இந்த தேர்வை, ஒவ்வொரு ஒன்றிய பகுதியிலும் நடத்தி, தகுதியானர்களை தேர்வு செய்திருக்கலாம். அதை விடுத்து, இப்படி அலைகழிப்பு செய்தது, மாற்று திறனாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார்,""ராஜபாளையத்திலிருந்து, ஆட்டோவிற்கு 1000 ரூபாய் வாடகை கொடுத்து, சிலர் வந்துள்ளனர். பலர், தங்களது சுய தொழிலை விட்டு, நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் தொடர் வேலை செய்யும் பணத்தை, ஆட்டோ வாடகைக்கு கொடுத்து வந்த இவர்களுக்கு, அந்தந்த பகுதியில் நேர்முக தேர்வு நடத்தியிருக்கலாம்,'' என்றார்.மாற்று திறனாளிகள் துறை அலுவலர் மணி,"" மாற்று திறனாளிகளுக்கு, இலவச டூவீலர் வழங்க ,மூன்று துறை அதிகாரிகள் சோதனை நடத்துவர். ஒன்றிய அளவில் சோதனை நடத்த, அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. சரியான நபர்களை தேர்ந்தெடுக்கவே, ஒரே இடத்தில், அனைவரையும் நேர்முக தேர்விற்கு அழைத்தோம்,'' என்றார்.

News Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=785368

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக