லால்குடியில் மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம்

கருத்துகள் இல்லை
மாற்று திறனாளிகள் மதிப்பீடு முகாம் லால்குடி: லால்குடியில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இதில் 262 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் லால்குடியில் நடைபெற்றது. எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வைரமணி, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், ஊராட்சி தலைவர்கள் மதிவாணன், கோல்டன் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கல்லக்குடி திமுக பிரமுகர் பால்துரை முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கருணாகரபாண்டியன், செவித்திறன் நிபுணர் செல்லம், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கதிர்வேல் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை மற்றும் மதிப்பீடு செய்து உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். முகாமில் செம்பரை கோபி, மாந்துறை சரவணன், நகர பிரதிநிதி இளங்கோவன், கர்ணன் லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, புவாளுர், குமுளுர், அழுந்தலைப்பூர், உட்பட 70 கிராமங்களை சேர்ந்த மாற்று திறனாளிகள் 262 பேர் கலந்துகொண்டனர். இளநிலை மறுவாழ்வு அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடநீக்கியல் வல்லுனர் ஆனந்த் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக